×

புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா: கோலாட்டம், கும்மியாட்டத்துடன் 35 ரதங்களில் அம்மன் ஊர்வலம்


தஞ்சாவூர்: பிரசித்தி பெற்ற தஞ்சை புன்னைநால்லூர் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா கோலாகலமாக நடைபெற்றது. உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் மாரியம்மன் கோயிலில் 3வது ஆடி வெள்ளியை முன்னிட்டு பூச்சொரிதல் விழா கோலாகலமாக நடைபெற்றுது. இந்த விழாவில் 35 ரத ஊர்திகளில் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட மாரியம்மன் மல்லி, முல்லை, ரோஜா என வாசனை பெற்ற பூக்களை 5,000 கூடைகளில் பக்தர்கள் ஊர்வலமாக கொண்டு வந்தனர்.

இதையடுத்து கோயில் வாசலில் தார தப்பட்டை, ஆட்டம், பாட்டம், கும்மியாட்டம், கோலாட்டம் என ஏராளமான பக்தர்கள் வேப்பிலை வைத்து சாமி ஆடி வந்தனர். இன்று காலை முதலே 5,000க்கு மேற்பட்ட பக்தர்கள் பல்வேறு மாவட்டங்கள் இருந்து வந்துள்ளனர். இதையடுத்து கோவிலில் ஆடி மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு பெண்கள் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கல் வைத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து அம்மனுக்கு பூக்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதனை தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

The post புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா: கோலாட்டம், கும்மியாட்டத்துடன் 35 ரதங்களில் அம்மன் ஊர்வலம் appeared first on Dinakaran.

Tags : Punnainallur Mariamman Temple ,Amman ,Kolattam ,Kummiyattam ,Thanjavur ,Thanjavur Mariamman Temple ,Aadi Villi ,
× RELATED நாட்டின் பன்முகத்தன்மையை சிதைக்க...