×

நெல் கிட்டங்கியினை கட்டித்தர கோரிக்கை

தேவகோட்டை, ஆக.3: தேவகோட்டை அருகே புளியால் கிராமத்தில் கிராம விவசாயிகள் சங்க கூட்டம் நடைபெற்றது. வட்டார தலைவர் பருத்தியூர் சூசைமாணிக்கம் தலைமை வகித்தார். சிவகங்கை மாவட்ட தலைவர் கல்லுவழி ஆபிரகாம், திருப்புவனம் விவசாயிகள் சங்கத் தலைவர் ஆதிமூலம் முன்னிலை வகித்தனர்.

விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த புளியால் ஆசிரியர் சூசைமுத்து, கடம்பனேந்தல் ராசுத்தேவர், கிளியூர் வேலு, திடக்கோட்டை சேதுக்கரசு ஆகியோரின் மறைவிற்கு நினைவு அஞ்சலி செலுத்தினர். மழையினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர்காப்பீட்டுத் தொகை வழங்கிட வேண்டும். விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் எடுக்கும் முடிவின்படி புளியாலில் நெல் கிட்டங்கியினை அரசு கட்டித்தர வேண்டும் என்ற கோரிக்கைகளை தீர்மானங்களாக நிறைவேற்றினர்.

Tags : Devakottai ,Puliyal ,Paruthiyur Soosaimanickam ,Sivaganga ,president ,Kalluvazhi Abraham ,Thiruppuvanam farmers' association ,Aadhimoolam ,Soosaimuthu ,Kadambanendhal Rasudevar ,Kiliyur Velu ,Thidakottai ,Sethukarasu ,
× RELATED உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா