- சுந்தரர் குருபூஜை
- ஆலவந்தீஸ்வரர் கோயில்
- கிருஷ்ணராயபுரம்
- அரணவள்ளி சமீதா
- பழைய ஜெயங்கொண்ட சோழபுரம்
- அரவந்தீஸ்வரர் கோயில்
- சிவன்
- கிருஷ்ணராயபுரம், கரூர் மாவட்டம்
- சுவாமி
- அம்பாள்
- சுந்தரர்
கிருஷ்ணராயபுரம், ஆக. 3: கிருஷ்ணராயபுரம் அருகே பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் ஆரணவல்லி சமேத ஆளவந்தீஸ்வரர் கோயிலில் சுந்தரர் குருபூஜை நடைபெற்றது. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பழமை வாய்ந்த சிவாலயமான ஆரணவல்லி சமேத ஆளவந்தீஸ்வரர் கோயிலில் சுந்தரர் குருபூஜை நடந்தது. பூஜையை முன்னிட்டு சுவாமி, அம்பாள் மற்றும் சுந்தரர் (நால்வர்களுக்கு) பால், தயிர், பழங்கள், பஞ்சாமிர்தம், தேன், பன்னீர், சந்தனம், திருமஞ்சனம், திருநீர், இளநீர் போன்ற திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம், தீப ஆராதனை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஏராளமான சிவனடியார்கள். பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
