×

பந்தலூரில் தெருநாய்கள் தொல்லை அதிகரிப்பு

 

பந்தலூர், ஆக.3: பந்தலூர் பஜார், காலனி சாலை, அட்டி வயல், பந்தலூர் அம்பேத்கர் நகர், எம்ஜிஆர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், காலை நேரத்தில் நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் என அனைவருக்கும் பாதிக்கப்படுகின்றனர்.  மேலும் நாய்கள் பாதசாரிகளை பின் தொடர்ந்து செல்வதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே தெருநாய்களை கட்டுப்படுத்துவதற்கு நெல்லியாளம் நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Tags : Pandalur ,Pandalur Bazaar ,Colony Road ,Atty Field ,Pandalur Ambedkar Nagar ,MGR Nagar ,Nellialam Municipal Administration ,
× RELATED ஊட்டியில் பனிக்கால கவியரங்கம்