×

அரசு பள்ளிகளில் பயின்று மருத்துவ கல்லூரிகளில் இடம்பெற்ற 28 பேரை கலெக்டர் பாராட்டினார்

திருவள்ளுர்: திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அரசு பள்ளிகளில் பயின்று மருத்துவ கல்லூரிகளில் இடம்பெற்ற 28 மாணவ-மாணவியர்கள் மற்றும் அம்மாணவ, மாணவியர்களை ஊக்கப்படுத்தும் விதமாக செயல்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களை மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் பாராட்டினார். திருவள்ளுர் மாவட்டத்தில் பல்வேறு அரசு பள்ளிகளில் பயின்று தற்போது மருத்துவ படிப்புக்கு தேர்வாகி பல்வேறு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ள மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் நமது மாவட்டத்தில் தான் தமிழகத்திலேயே இரண்டாவது அதிக அளவில் அரசு பள்ளியில் பயின்ற மாணவ மாணவியர்களுக்கு மருத்துவ படிப்பில் சேர்வதற்கு இடம் கிடைத்துள்ளது. அதாவது எம்பிபிஎஸ் படிப்பில் 23 மாணவர்களும் பிடிஎஸ் படிப்பில் 5 மாணவர்களும் தேர்வாகி உள்ளனர்.இந்த அளவிற்கு நமது மாவட்டம் மிகப்பெரிய வெற்றியை பெறுவதற்கு மாணவர்களின் உழைப்பும் ஆசிரியர்களின் கடின உழைப்பும் பெற்றோர்களின் ஊக்கமும் இதற்கு முக்கிய காரணம் .ஆகையால் இந்த வெற்றிக்கு காரணமான அனைவருக்கும் மாவட்ட நிர்வாகம் சார்பாக மீண்டும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இனிவரும் காலங்களில் மிகப்பெரிய வெற்றியை தேடி தருவதற்கு ஆசிரிய பெருமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியின்போது முதன்மை கல்வி அலுவலர் ப.அ.ஆறுமுகம், நேர்முக உதவியாளர் ந.பூபாலமுருகன், மாவட்ட கல்வி அலுவலர் (திருவள்ளுர்) ஆ.எல்லப்பன், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்….

The post அரசு பள்ளிகளில் பயின்று மருத்துவ கல்லூரிகளில் இடம்பெற்ற 28 பேரை கலெக்டர் பாராட்டினார் appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Thiruvallur District Collector's Office ,
× RELATED திருவள்ளூர் அருகே தொழிற்சாலை வாகனங்கள் மோதி 12 பெண் தொழிலாளர்கள் படுகாயம்