×

அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி பட்டியலில் விசிக, நாதக, தவெக

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தை பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் பட்டியலில் சேர்த்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை பின்பற்றி, மாநில தேர்தல் ஆணையமும் தமிழக வெற்றிக் கழகத்தை பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் பட்டியலில் சேர்த்து அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது.

பனையூர் கிழக்கு கடற்கரை சாலை முகவரியில் கட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சி ஆகியவற்றை அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகள் பட்டியலில் சேர்த்து இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனை ஏற்றுக் கொண்டு மாநில தேர்தல் ஆணையமும் அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

The post அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி பட்டியலில் விசிக, நாதக, தவெக appeared first on Dinakaran.

Tags : Visika ,Nadaka ,Taveka ,Chennai ,Election Commission of India ,TMC ,Tamil Nadu Victory Club ,State Election Commission ,Daveka ,Dinakaran ,
× RELATED சகோதர உணர்வுமிக்க இந்தியா தான்...