×

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மாமல்லபுரம் பேரூராட்சியில் 84 வேட்புமனு ஏற்பு: 2 சுயேட்சை ரிஜக்ட்

மாமல்லபுரம்: மாமல்லபுரம் பேரூராட்சியில் வேட்புமனு தாக்கல் பரிசீலனை நேற்று முடிந்தது. 86 பேர், மனுத்தாக்கல் செய்தனர். அதில், 2 சுயேட்சை வேட்பாளர்களின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.  தமிழகம் முழுவதும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு, கடந்த 28ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி, நேற்று முன்தினம் மாலை 5 மணியோடு நிறைவடைந்தது. இதையொட்டி மாமல்லபுரம் பேரூராட்சியின் 15 வார்டுகளுக்கும், கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட  திமுக, அதிமுக உள்பட பல்வேறு கட்சியினரும், சுயேட்சை வேட்பாளர்களும் விறுவிறுப்பாக வேட்புமனு தாக்கல் செய்தனர். இதில், 15 வார்டுகளுகளில் மொத்தம் 86 பேர் வேட்புமனு அளித்தனர். இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்ட தேர்தல் மேற்பார்வையாளர் மகேஸ்வரி ரவிக்குமார் முன்னிலையில் நேற்று வேட்புமனு பரிசீலனை நடந்தது. அதில் வேட்புமனு தாக்கல் செய்த 86 பேரில், 2 சுயேட்சை வேட்பாளர்களின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தொடர்ந்து, மேற்பார்வையாளர் மகேஸ்வரி ரவிக்குமார், அனைத்து மனுக்களையும் ஆய்வு செய்தார். அப்போது, மாமல்லபுரம் பேரூராட்சி தேர்தல் மேற்பார்வையாளர் தியாகராஜன், பேரூராட்சி செயல் அலுவலர் கணேஷ், துப்புரவு ஆய்வாளர் ரகுபதி, மேற்பார்வையாளர் தாமோதரன் உள்ளிட்டோர் இருந்தனர். தொடர்ந்து, மாமல்லபுரம் பேரூராட்சி தேர்தல் மேற்பார்வையாளர் தியாகராஜன், அர்ச்சுணன், தபசு அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு சென்று வாக்குப்பதிவு ஏற்பாடு குறித்து ஆய்வு செய்தார்திருப்போரூர்: திருப்போரூர் பேரூராட்சியின் 15 வார்டுகளுக்கும், கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட கடந்த 4ம் தேதி வரை 71 பேர் மனு தாக்கல் செய்தனர். நேற்று அனைத்து வேட்பாளர்களின் மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன. அதில் 7வது வார்டில் சுயேட்சை வேட்பாளர் ஒருவரது வேட்புமனு மட்டும் தள்ளுபடி செய்யப்பட்டது. தற்போது வரை 70 பேர் களத்தில் உள்ளனர். வேட்புமனுவை வாபஸ் பெற நாளை மாலை 5 மணிவரை நேரம் இருப்பதால், இறுதி வேட்பாளர் பட்டியல் நாளை மாலை வெளியிடப்படும். இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் திமுக 12 இடங்களிலும், மதிமுக 2 இடங்களிலும், விசிக ஒரு இடத்திலும் போட்டியிடுகிறது. அதிமுக 15 இடங்களிலும், பாமக 10 இடங்களிலும், பாஜ 3 இடங்களிலும், நாம் தமிழர் 5 இடங்களிலும் போட்டியிடுகிறது.கூடுவாஞ்சேரி: நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. இதில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அதிமுக, திமுக, பாமக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி என பல்வேறு கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் உட்பட 177 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதைதொடர்ந்து, வேட்பு மனுக்கள் பரிசீலனை நேற்று நடந்தது. அதில் வேட்புமனு தாக்கல் செய்த 177 பேரில் 175 மனுக்கள் ஏற்கப்பட்டன. இதில் 9வது வார்டில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் பாலாஜி, சுயேட்சை வேட்பாளர் பாலமுருகன் ஆகியோர் உறுதிமொழி பத்திரத்தில்  கையெழுத்து போடாததால் அவர்களது மனுக்கள் நிராகரிக்கப்பட்டன….

The post நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மாமல்லபுரம் பேரூராட்சியில் 84 வேட்புமனு ஏற்பு: 2 சுயேட்சை ரிஜக்ட் appeared first on Dinakaran.

Tags : Urban Local Body Election Mamallapuram Municipality ,Mamallapuram ,Dinakaran ,
× RELATED கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன்...