×

தேசிய ஜனநாயக கூட்டணி உடனான உறவு முறிந்தது: ஓபிஎஸ் ஆதரவாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் பேட்டி

சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஓ.பி.எஸ் தலைமையிலான அதிமுக உரிமை மீட்புக் குழு வெளியேறுவதாக அறிவித்துள்ளது. சென்னையில் தனது ஆதரவு நிர்வாகிகளுடன் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக் கூட்டத்த்துக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் பண்ருட்டி ராமச்சந்திரன்; தேசிய ஜனநாயக கூட்டணி உடனான உறவு முறிந்தது. ஒருமித்த கருத்தாகத்தான் பாஜக கூட்டணியிலிருந்து விலக முடிவு எடுத்துள்ளோம். இனி எப்போதும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெறமாட்டோம்.

எந்தக் கட்சியுடனும் தற்போது கூட்டணி இல்லை. கூட்டணியில் இருந்து விலகிய காரணம் அனைவருக்கும் தெரிந்ததுதான். பாஜக எங்களுக்கு என்ன செய்தது என்பதை நாடறியும்;சொல்ல வேண்டியதில்லை. தமிழ்நாடு முழுவதும் ஓ.பன்னீர்செல்வம் சுற்றுப் பயணம் மேற்கொள்வார். யாருடன் கூட்டணி என்பது குறித்து ஆராய்ந்து முடிவு செய்யப்படும். என்று கூறினார்.

The post தேசிய ஜனநாயக கூட்டணி உடனான உறவு முறிந்தது: ஓபிஎஸ் ஆதரவாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : National Democratic Coalition ,OPS ,Panruti Ramachandran ,Chennai ,National Democratic Alliance ,O. B. ,Majestic Right Recovery Group ,O. Paneer Selvam ,
× RELATED வைகை அணையில் இருந்து பாசனத்துக்கு...