×

இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்திய அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும்: வெள்ளை மாளிகை

வாஷிங்டன்: இந்தியா – பாகிஸ்தானை போரை நிறுத்தியதற்காக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பு செயலாளர் கரோலின் லீவிட் கூறியுள்ளார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய கரோலின் லீவிட், “இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதல், தாய்லாந்து மற்றும் கம்போடியா மோதல், இஸ்ரேல் மற்றும் ஈரான் போர், ருவாண்டா மற்றும் காங்கோ ஜனநாயக குடியரசு மோதல், செர்பியா மற்றும் கொசாவோ மோதல், எகிப்து மற்றும் எத்தியோப்பியா மோதல் என உலகின் பல நாடுகளுக்கு இடையேயான சண்டைகள் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் தலையீட்டின் மூலம் முடிவுக்கு வந்துள்ளன.

அமெரிக்க அதிபராக பதவியேற்ற ட்ரம்ப் தனது ஆறு மாத பதவிக் காலத்தில் சராசரியாக மாதத்திற்கு ஒரு சமாதான ஒப்பந்தம் அல்லது போர் நிறுத்தத்தை மேற்கொண்டுள்ளர். எனவே இது அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதற்கான நேரம் இது” என்றார். முன்னதாக அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் பெயரை பரிந்துரைத்தார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு. அதே போல், ட்ரம்பை அமைதிக்கான நோபல் பரிசிற்கு பரிந்துரைப்பதாக பாகிஸ்தான பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பும் கூறியிருந்தார். மேலும் ஈரான், இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் அறிவித்த அதிபர் ட்ரம்புக்கு அமைதிக்கான ‘நோபல் பரிசு’ வழங்க அமெரிக்க பிரதிநிதி பட்டி கார்டர் பரிந்துரை செய்தார்.

Tags : US ,President Trump ,India ,-Pakistan ,White House ,Washington ,President Donald Trump ,India-Pakistan ,Press ,Carolyn Leavitt ,India-Pakistan conflict ,Thailand-Cambodia conflict ,Israel-Iran war ,Rwanda-Democratic Republic of Congo conflict ,Serbia-Kosovo conflict ,Egypt ,
× RELATED வங்கதேசத்தின் சிட்டகாங்கில் இந்திய...