×

லாடபுரம் அரசு பள்ளியில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு சிலம்பாட்டம், கபடி

 

பெரம்பலூர், ஆக.1: பெரம் பலூர் மாவட்டம், லாடபுரம் அரசு ஆதி திராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு சிலம்பாட்டம், கபடி ஆட்டம் நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமைஆசிரியர் மாயக்கிருஷ்ணன் தலைமை வகித்தார். இதில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் போதைப் பொருட்களை பயன்படுத்த மாட்டேன், பள்ளி வளாகத்தில் போதைப் பொருட்களை பயன்படுத்த அனுமதிக்க மாட்டேன், போதையை ஒழிப்போம்,

போதை அழிவின் பாதை, புகைத்தல் புற்றுநோயை உருவாக்கும், வேண்டாம் வேண்டாம் போதைப் பொருள் வேண்டாம். ஒழிப்போம் ஒழிப்போம் போதைப் பொருட்களை ஒழிப்போம் என்று கோஷமிட்டனர். நிகழ்ச்சியில்மாணவர்கள் சிலம்பாட்டம் ஆடினர். மாணவ, மாணவிகள் கபடி விளையாடினர். பள்ளி ஆசிரியர்கள் அருணா கார்த்திகா, பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் இந்திராணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

Tags : -drug awareness ,Kabaddi ,Ladapuram Government School ,Perambalur ,Ladapuram Government Adi Dravidar Welfare High School ,headmaster ,Mayakrishnan ,
× RELATED பெரம்பலூர் மாவட்டத்தில் 49,548 வாக்காளர்கள் நீக்கம்