×

பண மோசடி வழக்கில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது

டெல்லி: பண மோசடி வழக்கில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனை டெல்லி போலீசார் கைது செய்தனர். ரூ.1,000 கோடி கடன் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.5 கோடி வாங்கி பண மோசடி செய்த புகாரில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். நகைச்சுவை நடிகர் பவர் ஸ்டார் எனும் சீனிவாசன் மீது 6 மோசடி வழக்குகள் உள்ளன. 2018ம் ஆண்டு முதல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தார் பவர் ஸ்டார் சீனிவாசன். நீதிமன்றத்தால் 2 முறை குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நிலையில் டெல்லி போலீசாரால் சீனிவாசன் கைது செய்யப்பட்டுள்ளார். மோசடி செய்த பணத்தை திரைப்படம், சொந்த செலவுக்காக பவர் ஸ்டார் பயன்படுத்தி வந்துள்ளார்

The post பண மோசடி வழக்கில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது appeared first on Dinakaran.

Tags : Actor Power Star Srinivasan ,Delhi ,Power Star Srinivasan ,Delhi Police ,Dinakaran ,
× RELATED கடும் எதிர்ப்பை மீறி அமலுக்கு வந்தது...