- உலக புலிகள் நாள் விழிப்புணர்வ
- கம்பம் நாலந்தா இன்னவெஷன் பள்ளி
- தூண்:
- உலகப் புலிகள் நாள்
- பில் நலந்தா இனவெஷன் பள்ள
- பூமியில்
- தின மலர்

கம்பம் : கம்பம் நாலந்தா இனோவேஷன் பள்ளியில் உலக புலிகள் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பூமியின் பசுமை வளங்களை சுமக்கின்ற வனங்களும், அதன் நிலைமாற்றத்தைக் கட்டுப்படுத்தும் உயிரினங்களும், குறிப்பாக புலிகள், இன்று பலவிதமான ஆபத்துகளை எதிர்நோக்கியுள்ளன. இத்தகைய சூழ்நிலையில், ஆண்டுதோறும் ஜூலை 29ம் தேதி உலக புலிகள் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.
அதன்படி கம்பம் நாலந்தா இனோவேஷன் பள்ளியில் பசுமை பரப்பையும், புலிகளின் பாதுகாப்பையும் முன்னிறுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கேஜி முதல் 5ம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள், புலி முகமூடிகளை அணிந்து கொண்டு ஒரு புலி ஒரு வனத்தைக் காக்கும், ஒரு வனம் உலகத்தைக் காக்கும், விலங்குகளை அழிக்காதீர்கள், இயற்கை அழியும். பசுமையில்லை என்றால் புவியில்லை போன்ற முழக்கங்களை எழுப்பினர்.
இதனை தொடர்ந்து புலிகள் குறித்த புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. இதற்கு பள்ளி தாளாளர் வி.கே.ஜி.விஸ்வநாதன் தலைமை தாங்கினார். பள்ளி துணை முதல்வர் மலர்விழி, கேஜி ஆசிரியை உமாதேவி, பள்ளி அலுவலக மேலாளர் விக்னேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சிறந்த புலி வேடமாடல், சிறந்த ஓவியம், சிறந்த முழக்கம் ஆகியவற்றிற்கான சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டன. இதில் பள்ளி மாணவ, மாணவியர்கள், பெற்றோர் கலந்து கொண்டனர்.
The post கம்பம் நாலந்தா இனோவேஷன் பள்ளியில் உலக புலிகள் தின விழிப்புணர்வு appeared first on Dinakaran.
