×

மன்னார்குடியில் தென்னிந்திய சீனியர் ஆண்கள் ஹாக்கி போட்டி

*தமிழ்நாடு காவல் துறை அணி சாம்பியன்

மன்னார்குடி : மன்னார்குடியில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான சீனியர் ஆண்கள் ஹாக்கி போட்டி இந்தியாட்டத்தில் தமிழ்நாடு காவல்துறை அணி 4- 3 என்ற கோல் கணக்கில் மத்திய சுங்கம் மற்றும் கலால் வரி அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தெட்சிணாமூர்த்தி, துரைராஜ், ரங்கசாமி நினைவு சுழற் கோப்பைக்கான தென்னிந்திய அளவிலான சீனியர் ஆண்கள் ஹாக்கி போட்டிகள் கடந்த நான்கு நாட்களாக நடந்து வந்தது.

4ம் நாளான நேற்று காலை நடந்த முதல் அரை இறுதி ஆட்டத்தில் மத்திய சுங்கம் மற்றும் கலால் வரி அணி 5 – 0 இன்று கோல் கணக்கில் மன்னன விவேக் நெம்மொரியல் அணியை வென்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.2வது அரை இறுதி போட்டியில் தமிழ்நாடு காவல்துறை அணி 5 – 4 இன்று போல் கணக்கில் பெங்களூரு கனரா வங்கி அணியை வென்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

தொடர்ந்து நேற்று மாலை பரப்பாக நடந்த இறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு காவல்துறை அணி 4- 3 என்ற கோல்கணக்கில் மத்திய சுங்கம் மற்றும் கலால் வரி அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.இரண்டாம் இடத்தை மத்திய சுங்கம் மற்றும் கலால் வரி அணியும், மூன்றாம் இடத்தை பெங்களூரு கனரா வங்கி அணியும், நான்காம் இடத்தை மன்னை விஜய் மெமோரியல் அணியும் வென்றது.தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவிற்கு கஸ்டம்ஸ் எஸ்பி ஸ்ரீராம் முன்னிலை வகித்தார்.

டேரிங்யங் ஸ்டர்ஸ் ஹாக்கி கிளப் தலைவர் மகேந்திரன் வரவேற்றார்.விழாவில், முன்னாள் நகர் மன்ற தலைவர் சிவா ராஜமாணிக்கம், நகர்மன்ற தலைவர் மன்னை சோழ ராஜன், தரணி கல்வி குழுமங்களில் நிறுவனர் எஸ். காமராஜ், தமிழ்நாடு அமைச்சூர் கபடி கழக மாநில அமைப்பு செயலாளர் ராஜ ராஜேந்திரன், சிங்கப்பூர் வாழ் இந்திய முஸ்லிம் பேரவை துணைத் தலைவர் அப்துல் மாலிக், அரசு உதவி பெறும் பின்லே மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சாம்சன் தங்கையா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் மட்டும் கோப்பைகளை வழங்கி பாராட்டினர்.

முடிவில் ஹாக்கி கிளப் பொருளாளர் செந்தில் குமார் நன்றி கூறினார்.தமிழ்நாடு காவல்துறை – மத்திய சுங்கம் மற்றும் கலால் ஆகிய அணிகளுக்கு இடையே நடந்த இறுதி ஆட்டத்தை ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பார்வையிட்டு வீரர்களை உற்சாகப் படுத்தினர்.

The post மன்னார்குடியில் தென்னிந்திய சீனியர் ஆண்கள் ஹாக்கி போட்டி appeared first on Dinakaran.

Tags : South Indian Senior Men's Hockey Tournament ,Mannargudi ,Tamil Nadu Police Team ,Tamil Nadu Police ,Central Customs and Excise ,Dinakaran ,
× RELATED ஒரு கோடி வாக்குகள் நீக்கம் மோடி அரசின்...