×

கடலூரில் சதமடித்த வெயில்

கடலூர், ஜூலை 31: கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனிடையே வெப்ப சலனம் காரணமாக மாலை மற்றும் இரவு நேரங்களில் அவ்வப்போது சாரல் மழை பெய்தது. கடந்த 4 நாட்களுக்கு மேலாக வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்தி வருகிறது. கோடை காலத்தை மிஞ்சும் வகையில் அக்னி நட்சத்திரம் முடிந்த நிலையிலும் சூரியன் சுட்டெரித்து வருகிறது. கடலூரில் நேற்று 100.3 டிகிரி வெயில் பதிவானது. சாலையில் அனல் காற்று வீசியதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். வெயிலின் கொடுமையில் இருந்து தப்பிக்க இளநீர், பழச்சாறு கடைகளை நாடிச்சென்றனர். கடும் வெயில் காரணமாக நேற்று மதியம் கடலூரில் பெரும்பாலான சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

Tags : Cuddalore ,Agni Nakshatra ,
× RELATED தனியார் நிறுவனத்தில் லாரி மோதி பெண் பலி