×

ஆபரேஷன் சிந்தூர் ஒன்றிய அரசின் தோல்வியின் சின்னம்: அகிலேஷ் யாதவ் கடும் தாக்கு

புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக மக்களவையில் நேற்று நடந்த சிறப்பு விவாதத்தில் உத்தரபிரதேச சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பேசியதாவது: பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் உளவுத்துறையும், ஒன்றிய அரசும் தோல்வி அடைந்து விட்டதற்கான சின்னம். உளவுத்துறை தோல்விக்கு யார் பொறுப்பேற்பார்கள்? இந்த கேள்விக்கு ஒன்றிய அரசு பதிலளிக்கும் என நம்புகிறேன். முக்கிய பிரச்னைகளில் இந்தியா தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு எந்த உலக நாடுகளும் இந்தியாவுக்கு ஆதரவாக இல்லை. இது இந்தியாவின் வௌிநாட்டு ராஜதந்திரத்துக்கு ஒரு இருண்ட கட்டம். நம் அண்டை நாடுகள் நம்மை தாக்குகின்றன அல்லது ஆக்கிரமிக்கின்றன. இந்தியா பாகிஸ்தான் போரை இந்தியா திடீரென் முடிவுக்கு கொண்டு வந்தது. யாருடைய அழுத்தம் காரணமாக ஒன்றிய அரசு அவ்வாறு செய்தது?” என்று பேசினார்.

The post ஆபரேஷன் சிந்தூர் ஒன்றிய அரசின் தோல்வியின் சின்னம்: அகிலேஷ் யாதவ் கடும் தாக்கு appeared first on Dinakaran.

Tags : Operation Sindh ,Union government ,Akhilesh Yadav ,New Delhi ,Lok Sabha ,Uttar Pradesh Samajwadi Party ,Pahalgam attack ,Union government.… ,Dinakaran ,
× RELATED குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 1ம் தேதி...