×

கண்டமனூர் மயானத்திற்கு செல்லும் பாதையில் தார்ச்சாலை அமைக்கும் பணி ஜரூர்

வருசநாடு: கண்டமனூர் மயானத்திற்கு செல்லும் பாதையில் தார்ச்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. தேனி மாவட்டம், கண்டமனூர் மயானத்திற்கு செல்லும் சாலை பல ஆண்டுகளாக குண்டும் குழியுமாக கிடந்தது. இதனால் இறந்தவர்களை வாகனங்களில் கொண்டு செல்லமுடியாமல் பொதுமக்கள் சிரமப்பட்டு வந்தனர். மயானத்திற்கு தார் சாலை வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, டி.என்.என்.ஆர்.எஸ். திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பில் தார்ச்சாலை அமைக்க மாவட்ட நிர்வாகம் நிதி ஒதுக்கீடு செய்தது. இதனையடுத்து தற்போது தார்ச்சாலை அமைக்கும் பணிகள் ஜரூராக நடந்து வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்….

The post கண்டமனூர் மயானத்திற்கு செல்லும் பாதையில் தார்ச்சாலை அமைக்கும் பணி ஜரூர் appeared first on Dinakaran.

Tags : Jarur ,Tarchaal ,Kandamanur Mayana ,Varasanadu ,Kandamanur ,Mayanam ,Theni District ,Jurur ,
× RELATED தீபாவளி வசூல் ஜரூர் : தமிழகத்தில் பல...