- ஸ்டாலின்
- திருப்பூர்
- ஸ்டாலின் திட்ட முகாம்
- தெற்கு ரோட்டரி
- திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதி
- செல்வராஜ் எம்.எல்.ஏ.
திருப்பூர், ஜூலை 30: திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 36,42,43 ஆகிய பகுதி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தெற்கு ரோட்டரியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நேற்று நடைபெற்றது. இதனை செல்வராஜ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து முகாமினை ஆய்வு செய்தார். முகாமில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம், முதியோர், விதவை, கணவரால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, ஆதார் திருத்தம், ரேசன் கார்டு, பிறப்பு, இறப்பு சான்றிதழ் உள்பட பல்வேறு சான்றிதழ்கள், சொத்து வரி தொடர்பான பிரச்னைகள் உள்பட பல்வேறு துறை சார்ந்த சேவைகள் வழங்கப்பட்டது.
இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கோரிக்கைகள் தொடர்பான விண்ணப்பங்களை வழங்கினர். இதுபோல் மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இதில் மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்பிரமணியம், தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜன், கவுன்சிலா்கள் செந்தில்குமார், திவாகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் கலந்து கொள்ள ஏராளமான பெண்கள் குழந்தைகளுடன் வந்தனர். குழந்தைகளுடன் வந்தவர்களுக்கு இலவசமாக பால் மற்றும் முதியவர்களுக்கு டீ, பிஸ்கட் போன்றவை செல்வராஜ் எம்.எல்.ஏ. ஏற்பாட்டில் வழங்கப்பட்டது.
