- நாகர்கோவில் CED நர்சிங் கல்லூரி பட்டமளிப்பு விழா
- நெல்லை
- CED நர்சிங் கல்லூரி
- நாகர்கோவில்
- சபாநாயகர்
- Appavu
- உதவி பேராசிரியர்
- அமலா ஸ்டெஃபி
- ஷாகுல் ஹமீது
- பொருளாளர்
- சாடிக் அலி
- நிர்வாக அறங்காவலர்
- முஹம்மது ஷா
- துணை முதல்வர்
- சற்குணம் முரளி
நெல்லை, ஜூலை 29: நாகர்கோவில் திடலில் உள்ள சி.இ.டி செவிலியர் கல்லுாரியின் 10-வது மற்றும் 11-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சபாநாயகர் அப்பாவு தலைமை வகித்தார். துணை பேராசிரியர் அமலா ஸ்டெபி வரவேற்றார். நிறுவனத்தின் செயலாளர் ஷாகுல்ஹமீது, பொருளாளர் சாதிக் அலி மற்றும் நிர்வாக அறங்காவலர் முஹம்மது ஷா ஆகியோர் சபாநாயகரை வரவேற்றனர். தொடர்ந்து, சபாநாயகர் அப்பாவு மாணவர்களுக்கு ஊக்கமளித்து பேசினார்.
அதன்பின், கல்லூரியின் துணை முதல்வர் சற்குணம் முரளி உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் பட்டம் வழங்கப்பட்டது. தொடர்ந்து கல்லூரி முதல்வர் முனைவர் பிரமிளா ஸ்டாலின் தலைமையில் மாணவர்கள், செவிலியர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். சிறப்பு விருந்தினர் டாக்டர். ஆயிஷா சித்திக் மருத்துவத் துறையில் செவிலியர்களின் பங்கு குறித்தும், மாஷா நஸீம் மருத்துவத்துறையில் புதுமையான படைப்புகள் குறித்தும் ேபசி மாணவர்களுக்கு ஊக்கமளித்தனர். நிகழ்ச்சியில் நிர்வாக அறங்காவலர், அரசியல் பிரமுகர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் பங்கேற்றனர். கல்லூரி துணை பேராசிரியை லிஜா நன்றி கூறினார்.
