கின்ஷாசா: காங்கோவில் உள்ள தேவாலயத்தில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 20க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். கிழக்கு காங்கோவின் கோமாண்டோ பகுதியில் கத்தோலிக்க தேவலாயம் ஒன்று உள்ளது. இங்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சனிக்கிழமை நள்ளிரவு முதலே ஏராளமானோர் கூடி பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது நேற்று அதிகாலை 1 மணியளவில் தேவாலயத்துக்குள் புகுந்த நேச நாட்டு ஜனநாயக படை என்ற அமைப்பை சேர்ந்த கிளர்ச்சியாளர்கள் அங்கு பிரார்த்தனை செய்து கொண்டிருந்த மக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தினர். இதனால் பீதியடைந்த மக்கள் அலறியடித்து கொண்டு சிதறி ஓடினர். அங்கிருந்த வீடுகள், கடைகள் உள்ளிட்டவற்றையும் கிளர்ச்சியாளர்கள் தீயிட்டு எரித்தனர். இந்த துப்பாக்கி சூட்டில் 21 பேர் கொல்லப்பட்டனர்.
The post காங்கோ தேவாலயத்தில் துப்பாக்கி சூடு: 20க்கும் மேற்பட்டோர் பலி appeared first on Dinakaran.
