×

நிதிஷ் அரசு குற்றவாளிகள் முன் சரணடைந்து விட்டது: சிராக் பாஸ்வான் கடும் தாக்கு

கயா: ஒன்றிய அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சி தலைவருமான சிராக் பாஸ்வான் நேற்று பாட்னாவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஆம்புலன்சில் பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டது பற்றி சிராக் பாஸ்வானிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சிராக் பாஸ்வான், “இந்த சம்பவம் வருந்தத்தக்கது.

குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருந்தாலும், நிதிஷ் குமார் அரசால் இதுபோன்ற குற்றங்களை தடுக்க முடியவில்லை என்பதுதான் உண்மை. பீகாரில் கொள்ளை, கொலை, பலாத்காரம் போன்ற குற்றச்செயல்கள் அதிகமாகி விட்டன. நிதிஷ் குமார் அரசு குற்றவாளிகள் முன் சரணடைந்து விட்டது. மாநிலத்தில் நடக்கும் குற்றங்களை தடுக்க முடியாத இதுபோன்ற அரசாங்கத்தை ஆதரித்ததற்கு நான் வருத்தப்படுகிறேன் ” என்றார்.

The post நிதிஷ் அரசு குற்றவாளிகள் முன் சரணடைந்து விட்டது: சிராக் பாஸ்வான் கடும் தாக்கு appeared first on Dinakaran.

Tags : Nitish government ,Chirag Paswan ,Gaya ,Union Minister ,Lok Janshakti Party ,Patna ,Dinakaran ,
× RELATED ரூ.12.56 கோடி தங்கக் கடத்தல் விவகாரம்...