×

ஆசிய கோப்பை கிரிக்கெட் எமிரேட்சில் நடத்த முடிவு

புதுடெல்லி: ஆசிய கோப்பை டி20 போட்டி தொடரை இந்தாண்டு நடத்தும் உரிமையை இந்தியா பெற்றது. இதில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஹாங்காங், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஓமன் ஆகிய 8 அணிகள் மோதவுள்ளன.

கடந்த பிப்ரவரியில் பாகிஸ்தானில் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டிகளின்போது, தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதால் அங்கு சென்று ஆட முடியாது என இந்திய தரப்பில் கூறப்பட்டதால், இந்தியா ஆடிய போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்தன.

இந்நிலையில், ஆசிய கோப்பை போட்டி தொடர்பாக, வங்கதேச தலைநகர் டாக்காவில் நேற்று முன்தினம் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அக்கூட்டத்தின் முடிவில் ஆசிய கோப்பை போட்டிகளை, ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு மாற்றுவதென முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

The post ஆசிய கோப்பை கிரிக்கெட் எமிரேட்சில் நடத்த முடிவு appeared first on Dinakaran.

Tags : Asia Cup Cricket ,Emirates ,New Delhi ,India ,Asia Cup T20 ,Pakistan ,United ,Arab Emirates ,Hong Kong ,Afghanistan ,Bangladesh ,Sri Lanka ,Oman ,Dinakaran ,
× RELATED இந்த ஆண்டில் ‘கூகுளில்’ அதிகம்...