×

கர்நாடகா தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம் ஐம்பெரும் ஆற்றல்கள் நூல் வெளியீட்டு விழா

பெங்களூரு: கர்நாடக தமிழ் பத்திரிகையாளர் சங்கம் ஐம்பெரும் ஆற்றல்கள் நூல் வெளியீட்டுவிழா வரும் 27ம் தேதி நடைபெறுகிறது.

இது குறித்து சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
‘கர்நாடக தமிழ் பத்திரிகையாளர் சங்கம் சார்பில் தமிழறிஞர் தமிழ் இயலன் எழுதிய ‘ஐம்பெரும் ஆற்றல்கள்’ நூல் வெளியீட்டுவிழா வரும் 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, காலை 10 மணிக்கு பெங்களூரு இன்ஸ்டிடியூஷன் ஆப் அக்ரிகல்சுரல் டெக்னாலஜிஸ்ட்ஸ், முதல்தளம், 15, குயின்ஸ் சாலையில் நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கு பேரா.வெ.தமிழ்ச்செல்வன், துணைமுதல்வர், எஸ்.என்.ஆர்.பட்டக்கல்லூரி தலைமை வகிக்கிறார்.

அ.செந்தில்நாதன், சொ.தண்டபாணி, வி.வெங்கடேசன், ஆர்.எம்.இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். எழுத்தாளர் விட்டல்ராவ், நூலை வெளியிடுகிறார். முனைவர் தேவி இராஜேஷ் நூலை பெற்று கொள்கிறார். நகைச்சுவை நாவேந்தர் குடியாத்தம் குமணன், கவிஞர் ஞால.இரவிச்சந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள். நூலாசிரியர் கவிஞர் தமிழ் இயலன் ஏற்புரை வழங்குகிறார்.

The post கர்நாடகா தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம் ஐம்பெரும் ஆற்றல்கள் நூல் வெளியீட்டு விழா appeared first on Dinakaran.

Tags : Karnataka Tamil ,Journalists ,Association ,Imperum Atalal Thread-Publication Ceremony ,Bangalore ,Karnataka Tamil Journalists Association ,Imperum Atalal Thun Publication Ceremony ,Karnataka ,Tamil ,Journalists Association ,Immerum Energies Book Launch Festival ,Dinakaran ,
× RELATED கடும் மூடுபனி காரணமாக அசாமில் ரயில்...