×

தர்பூசணி விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து அரசு பதில்தர ஐகோர்ட் ஆணை!!

சென்னை: தர்பூசணி விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து அரசு பரிசீலிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தர்பூசணியில் ரசாயனம் செலுத்தப்பட்டதாக கூறி உணவு பாதுகாப்புத் துறை பிரச்சாரத்தால் பாதிப்பு ஏற்பட்டதாக மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த வழக்கு விசாரணையில், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு தருவது பற்றி பரிசீலிக்க அரசுக்கு சென்னை ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. பழங்களில் எந்த ரசாயனமும் செலுத்தப்படவில்லை என கண்டறியப்பட்டுள்ளதாக தோட்டக்கலைத்துறை தரப்பில் பதில் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகள் தவறான பிரச்சாரத்தை பரப்பியதால் தர்பூசணி விற்பனை கடுமையாக பாதிப்பு ஏற்பட்டதாக விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

The post தர்பூசணி விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து அரசு பதில்தர ஐகோர்ட் ஆணை!! appeared first on Dinakaran.

Tags : Aycourt ,Chennai ,Supreme Court ,Food Safety Department ,Dinakaran ,
× RELATED தராசுகள் பறிமுதல் செய்ததை கண்டித்து...