×

31ம் தேதி தேர்ப்பவனி நென்மேனி புனித இன்னாசியார் ஆலய திருவிழா கொடியேற்றம்

சாத்தூர், ஜூலை 24: நென்மேனி புனித இன்னாசியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. 31ம் தேதி தேர்பவனி நடைபெறுகிறது. சாத்தூர் அருகே உள்ள நென்மேனி லொயோலா இன்னாசியார் சர்ச்சின் 136வது ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலையில் பாளையங்கோட்டை மறை மாவட்டம் அருட்பணியாளர் வினோத் பால்ராஜ் அடிகளார் புனித இன்னாசியார் உருவம் பொறித்த கொடியினை ஏற்றி வைத்து திருவிழாவை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து திருப்பலியும் மறையுரையும் நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்வாக 31ம் தேதி அதிகாலை 3 மணிக்கு புனித இன்னாசியார் திருஉருவம் வண்ண மலர்களாலும், மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட தேரில் தேர்பவனி நடைபெறுகிறது.

The post 31ம் தேதி தேர்ப்பவனி நென்மேனி புனித இன்னாசியார் ஆலய திருவிழா கொடியேற்றம் appeared first on Dinakaran.

Tags : Therbhavani Nenmeni St. Innasiyar Temple Festival ,Therbhavani ,Nenmeni Loyola Innasiyar Church ,Sattur ,Therbhavani Nenmeni St. Innasiyar Temple Festival Flag Hoisting ,Dinakaran ,
× RELATED உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா