- ஆடி
- Melmalayanur
- அமாவாசை
- விழுப்புரம்
- தமிழ்நாடு அரசு போக்குவரத்து வாரியம்
- தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்
- தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் விழுப்புரம் கோட்டம்
- ஆதி அமாவாசையோ
விழுப்புரம், ஜூலை 24: விழுப்புரம் கோட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு; இன்று ஆடி அமாவாசையையொட்டி பக்தர்கள் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் விழுப்புரம் கோட்டம் சார்பாக மேல்மலையனூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. பயணிகள் கூட்டம் குறையும்வரை தேவைக்கேற்ப பேருந்துகளை ஏற்பாடு செய்திடவும், பேருந்து இயக்கத்தை மேற்பார்வை செய்யவும் அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
அதன்படி கிளாம்பாக்கத்திலிருந்து 300 பேருந்துகளும், காஞ்சிபுரத்திலிருந்து 30 பேருந்துகளம், வேலூரிலிருந்து 15, விழுப்புரம், புதுச்சேரி, திருவண்ணாமலையிலிருந்து தலா 20 பேருந்துகளும், திருக்கோவிலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூரிலிருந்து தலா 10 பேருந்துகள் என மொத்தம் 425 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post ஆடி அமாவாசையையொட்டி மேல்மலையனூருக்கு 425 சிறப்பு பேருந்துகள் இயக்கம் appeared first on Dinakaran.
