×

ஈரோடு குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்திலிருந்து வலது மற்றும் இடதுகரை வாய்க்கால் மூலம் பாசனம் நிலங்களுக்கு தண்ணீர் திறந்துவிட தமிழ்நாடு அரசு ஆணை..!!

சென்னை: ஈரோடு குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்திலிருந்து வலது மற்றும் இடதுகரை வாய்க்கால் மூலம் பாசனம் நிலங்களுக்கு தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்க விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று,பொதுப்பணித்துறை மூலம் வலது மற்றும் இடது கரை வாய்க்கால்களில் தண்ணீர் திறந்துவிட அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ஈரோடு மாவட்டம். கோபிசெட்டிபாளையம் வட்டம்.

கொங்கர்பாளையம் கிராமம், குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்திலிருந்து வலது மற்றும் இடதுகரை வாய்க்கால் மூலம் பாசனம் பெறும் புஞ்சை பாசன நிலங்களுக்கு, சிறப்பு நனைப்பிற்கு (Special Wetting) 24.07.2025 முதல் 30.07.2025 வரை 7 நாட்களுக்கு, 14.515 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. இதனால், ஈரோடு மாவட்டம். கோபிசெட்டிபாளையம் வட்டத்திலுள்ள கொங்கர்பாளையம், கவுண்டம்பாளையம், வாணிப்புத்தூர், அரக்கன்கோட்டை மற்றும் புஞ்சைத்துறையம்பாளையம் ஆகிய கிராமங்களிலுள்ள 2498 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

The post ஈரோடு குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்திலிருந்து வலது மற்றும் இடதுகரை வாய்க்கால் மூலம் பாசனம் நிலங்களுக்கு தண்ணீர் திறந்துவிட தமிழ்நாடு அரசு ஆணை..!! appeared first on Dinakaran.

Tags : TAMIL NADU GOVERNMENT ,ERODU GUNDERIPALLAM RESERVOIR ,Chennai ,Government of Tamil Nadu ,Erode Gunderippallam Reservoir ,Gunderippallam Reservoir ,Department of Public Works ,Erodu Gunderippallam Reservoir ,
× RELATED சகோதர உணர்வுமிக்க இந்தியா தான்...