- மணிலா
- தைலாபுரம்
- Vanur
- விழுப்புரம் மாவட்டம்
- துணை
- குமாரி ஆனந்தி
- தேசிய சமையல் எண்ணெய் திட்டம்
- வானூர் தாலுகா.…
*வேளாண்மை துணை இயக்குனர் ஆய்வு
வானூர் : வானூர் தாலுகா தைலாபுரம் கிராமத்தில் தேசிய சமையலெண்ணெய் இயக்கத்தின் கீழ் அமைக்கப்பட்ட மணிலா மதிப்பு தொகுப்பு சங்கிலி வயலை விழுப்புரம் மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் (திட்டம்) குமாரி ஆனந்தி ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் தெரிவித்ததாவது, விழுப்புரம் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் மணிலா சாகுபடி பரப்பு மற்றும் உற்பத்தி திறனை அதிகரித்து அறுவடைக்கு பின் மதிப்பு கூட்டுதல் செய்திடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்காக 11 வட்டாரங்களில் மதிப்பு சங்கிலி பங்குதாரர்களான உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை கண்டறிந்து எண்ணெய்வித்து பயிரான மணிலா சாகுபடி பரப்பை காரிப் மற்றும் ராபி பருவத்தில் அதிகரித்து கொள்முதல் செய்திட திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக வானூர் வட்டாரத்துக்கு 250 ஹெக்டர் பரப்பு இலக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு, 100 ஹெக்டர் பரப்பில் மணிலா விதைப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் நடப்பு ஆடிப்பட்டத்தில் மணிலா விதைப்பு செய்ய விரும்பும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொண்டு விதைகள் பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொண்டார்.
இதனை தொடர்ந்து தைலாபுரம் கிராமத்தில் 5 ஏக்கர் பரப்பில் விவசாயி ரமேஷ் மற்றும் சொக்கலிங்கம் ஆகியோர் பயிரிட்ட மணிலா விதைப்பு செய்த வயலை ஆய்வு செய்து விவசாயிகளுக்கு பயிர் பாதுகாப்பு மருந்துகள் தெளித்திட அறிவுரை வழங்கினார்.
இந்த ஆய்வின்போது வானூர் வேளாண்மை உதவி இயக்குனர் எத்திராஜ், துணை வேளாண்மை அலுவலர் செந்தில்குமார், உதவி விதை அலுவலர் மோகன்குமார், உதவி வேளாண்மை அலுவலர்கள் ரேகா, மஞ்சு மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர் கோவிந்தசாமி ஆகியோர் உடனிருந்தனர்.
The post தைலாபுரம் கிராமத்தில் மணிலா சாகுபடி appeared first on Dinakaran.
