×

ஜகதீப் தன்கர் ராஜினாமாவில் சந்தேகத்தை கிளப்பும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்!!

டெல்லி: ஜகதீப் தன்கர் ராஜினாமாவில் சந்தேகம் உள்ளதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். நேற்று பகல் 12.30-க்கு ஜெகதீப் தன்கர் தலைமையில் மாநிலங்களவையின் அளுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் நடந்தது. அவையின் ஆளுங்கட்சித் தலைவர் நட்டா, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு உள்ளிட்ட மூத்த உறுப்பினர்கள் அதில் பங்கேற்றனர். மீண்டும் மாலை 4.30 கூட்டம் கூடியபோது, நட்டா, ரிஜிஜு அதில் பங்கேற்கவில்லை. அதுகுறித்த தகவலும் தன்கரிடம் தெரிவிக்கப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த தன்கர், இன்று பகல் 1 மணிக்கு கூட்டத்தை ஒத்திவைத்தார். நேற்று பிற்பகல் 1 மணி முதல் மாலை 4.30 மணிக்குள் ஏதோ ஒரு தீவிரமான விஷயம் நடந்துள்ளது. இப்போது யாரும் எதிர்பாராத விதமாக தன்கர் ராஜினாமா செய்துள்ளார். ஆகவே நேற்று பிற்பகல் 1 மணி முதல் மாலை 4.30 மணிக்குள் நடந்தது என்ன? அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

The post ஜகதீப் தன்கர் ராஜினாமாவில் சந்தேகத்தை கிளப்பும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்!! appeared first on Dinakaran.

Tags : Congress ,General Secretary ,Jairam Ramesh ,Jagdeep Dhankar ,Delhi ,Rajya Sabha Budget Committee ,House ,Nadda ,Parliamentary Affairs Minister… ,Congress General Secretary ,Dinakaran ,
× RELATED நிதித்துறை இணைஅமைச்சர் பதவி...