- DNBSC
- புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்
- புதுக்கோட்டை
- TNPSC குழு
- கலெக்டர்
- அருணா
- தமிழ்நாடு அரசு ஊழியர்கள் தேர்தல்
- TNPSC
- தின மலர்
புதுக்கோட்டை, ஜூலை 22: புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி வழங்கப்படுகிறது என கலெக்டர் அருணா தெரிவித்தார். தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் தொகுதி II & IIA (11/2025) போட்டித்தேர்வுக்கு 645 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
இப்போட்டித்தேர்விற்கான கட்டணமில்லா நேரடி பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகம், திருக்கோகரணம், புதுக்கோட்டை வளாகத்தில் சிறந்த வல்லுநர்களைக் கொண்டு 23.07.2025 (புதன்கிழமை) அன்று காலை 10.30 மணிக்கு தொடங்கப்பட உள்ளது. இப்பயிற்சியின் போது கட்டணமில்லா பாடக்குறிப்புகள் வழங்கப்படும். ஒவ்வொரு வாரமும் மேற்படி தேர்விற்கான மாதிரித் தேர்வுகள் நடத்தப்படும்.
இந்த கட்டணமில்லா பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் மாணவர்கள் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், ஆதார் அட்டை நகல், தொகுதி II & IIA முதல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பித்த விண்ணப்ப நகல் ஆகியவற்றுடன் புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரடியாக வருகைபுரியுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.இந்த பயிற்சி வகுப்பில் அனுபவம் வாய்ந்த பயிற்றுநர்களைக் கொண்டும், ஸ்மார்ட் வகுப்பறைகள் மூலமும் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், வேலைவாய்ப்பு மற்றும் https://tamilnaducareerservices.tn.gov.in/ இணையதளத்தில் அனைத்துவிதமான போட்டித்தேர்வுகளுக்கும் கட்டணமில்லா பாடக்குறிப்புகள் மற்றும் இணையவழி மாதிரிதேர்வுகள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம். மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் அருணா, தெரிவித்துள்ளார்.
The post புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2,2ஏ தேர்வுக்கு இலவச பயிற்சி appeared first on Dinakaran.
