×

4 மகாராஷ்டிரா அமைச்சர்களின் ஆபாச வீடியோக்கள்: உத்தவ் கட்சி எம்.பி. சஞ்சய் ராவத் பகிரங்க குற்றச்சாட்டு

மும்பை: உத்தவ் சிவசேனா கட்சி எம்.பி. சஞ்சய் ராவத் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், மகாராஷ்டிரா மாநிலத்தில் 4 அமைச்சர்களும் சில அதிகாரிகளும் ஹனி டிராப்பில் சிக்கியுள்ளனர். பிளவுபடாத சிவசேனா கட்சியை சேர்ந்த 4 இளம் எம்.பி.க்களும் ஹனி டிராப்பில் சிக்கியதால்தான் அவர்கள் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு தாவி பாரதிய ஜனதா கூட்டணி ஆட்சி அமைக்க உதவினர். 4 அமைச்சர்களின் ஆபாச வீடியோக்கள் குறித்து முதல்வர் பட்நவிசுக்கு தெரியும். இவ்வாறு சஞ்சய் ராவத் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே டெல்லியில் பேட்டி அளித்த ராவத், பிளவுபடாத சிவசேனா கட்சியை சேர்ந்த 4 எம்.பி.க்கள், ஹனி டிராப்பில் சிக்கவைக்கப்பட்டனர். பின்னர், அவர்களின் ஆபாச வீடியோ காட்சிகளை காட்டி மிரட்டப்பட்டதால் பாரதிய ஜனதா கூட்டணிக்கு தாவினர். பாரதிய ஜனதா கூட்டணியில் சேர்ந்த பின்னர் அவர்கள் மீதான இந்த கறை துடைக்கப்பட்டது. இவ்வாறு ராவத் கூறினார். சஞ்சய் ராவத்தின் குற்றச்சாட்டை வருவாய் துறை அமைச்சர் சந்திரசேகர் பவன்குலே நிராகரித்தார்.

The post 4 மகாராஷ்டிரா அமைச்சர்களின் ஆபாச வீடியோக்கள்: உத்தவ் கட்சி எம்.பி. சஞ்சய் ராவத் பகிரங்க குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Maharashtra ,Uddhav Party ,Sanjay Rawat ,Mumbai ,Uddhav Shiv Sena Party ,X ,Shiv Sena party ,Dinakaran ,
× RELATED திருப்பதியில் பேனருடன் நின்ற அதிமுக...