- தர்ஹா கொடி உயர்த்தும் விழா
- பனைக்குளம் கொப்பதப்பா தர்ஹா கொடி உயர்த்தும் விழா
- முஸ்லிம் பாரிபாலனா சபை
- ஜனாதிபதி
- அப்துல் வஹாப்
- துணைத்தலைவர்
- சிராஜ்தீன்
- தவ்லத் பக்ஹீர்
- தலைமை பாஷ் இமாம் ஹஜா
- முகைதீன் ஆலிம்
- தர்ஹா கொடி விழா
- Panaikulam
- தின மலர்
மண்டபம், ஜூலை 21: பனைக்குளம் கோப்பத்தப்பா தர்ஹா கொடியேற்று விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. முஸ்லீம் பரிபாலன சபை தலைவர் அப்துல் வஹாப், உப தலைவர் சிராஜ்தீன், செயலாளர் தவ்லத் பாக்கீர் மற்றும் தலைமை பேஷ் இமாம் ஹாஜா முகைதீன் ஆலீம் ஆகியோர் தலைமை தாங்கினார்.
முஸ்லிம் நிர்வாக சபை தலைவர் கரீம் கனி, செயலாளர் ரசீது அலி, ஐக்கிய முஸ்லீம் சங்க நிர்வாகிகள், உறுப்பினார்கள் முன்னிலையிலும் நடைபெற்றது. பேஷ் இமாம் ஹாஜா முகைதீன் ஆலீம் தலைமையில், சிறப்பு மெளலீது ஒதப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் முஸ்லீம் பரிபாலன சபை பொருளாளர் பலில் அஹமது, உப செயலாளர் மாஸ் சேகு உதுமான் மற்றும் சீனி சதக்கத்துல்லா சிராஜ் மைதீன் மற்றும் ஜமாத் நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஜமாத் சங்க நிர்வாகிகள், உறுப்பினார்கள் செய்து இருந்தனர்.
The post பனைக்குளத்தில் தர்ஹா கொடியேற்று விழா appeared first on Dinakaran.
