×

நயினாருக்கு எதிராக விவசாயிகள் கருப்புக்கொடி

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் அருகே உத்தமசோழபுரத்தில் வெட்டாற்றின் குறுக்கே ரூ.50 கோடி மதிப்பில் தடுப்பணை கட்டும் பணி தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. இந்த தடுப்பணையை பூதங்குடியில் வெட்டாற்றில் கட்ட வேண்டும் என சில விவசாய சங்கங்கள் போராடி வருகின்றன. இந்நிலையில் பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உத்தமசோழபுரத்தில் தடுப்பணை கட்டுவதை நிறுத்த கோரி நாகூர் அருகே வாஞ்சூர் ரவுண்டானாவில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்.

இதை அறிந்த உத்தமசோழபுரம் பகுதியை சேர்ந்த விவசாயிகள், பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நாகப்பட்டினம் மாவட்டத்தை விட்டு உடனே வெளியேற வேண்டும். உத்தமசோழபுரத்தில் தடுப்பணை கட்ட வேண்டும் என கோஷங்கள் எழுப்பி உத்தமசோழபுரத்தில் அணை கட்டும் இடத்தில் வெட்டாற்றில் கருப்பு கொடியுடன் இறங்கி போராட்டம் நடத்தினர்.

 

The post நயினாருக்கு எதிராக விவசாயிகள் கருப்புக்கொடி appeared first on Dinakaran.

Tags : Nagapattinam ,Vetta river ,Uttamacholapuram ,Thirumarugal ,Bhuthangudi ,
× RELATED இந்தியாவின் முக்கிய நகரங்களில் சர்வே;...