×

தமிழ்நாடு சீர்மரபினர் நல வாரிய நலத்திட்டங்களை பெற ஆதார் அங்கீகாரம் கட்டாயம்

சென்னை: தமிழ்நாடு சீர்மரபினர் நல வாரியத்தால் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களுக்கு ஆதார் அங்கீகாரம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விபத்து உதவி, இயற்கை மரணம், இறுதிச் சடங்கு செலவுகள், கல்வி உதவி, திருமணம், மகப்பேறு உதவி, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட திட்டங்களுக்கு ஆதார் அங்கீகாரத்தை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தொடர் சேவை வழங்க, சேவை வழங்கும் முகாம், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் மற்றும் சென்னை மாநகராட்சி ஆகியவற்றில் பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மோசமான பயோமெட்ரிக்ஸ் அல்லது பிற சிக்கல்கள் காரணமாக ஆதார் சரிபார்ப்பு தோல்வியுற்றால், முக அங்கீகாரம் அல்லது ஓடிபி அடிப்படையிலான சரிபார்ப்பு போன்ற மாற்று முறைகள் வழங்கப்படும். இது எதுவும் செய்யவில்லை என்றால், அதன் க்யூஆர் குறியீடு மூலம் சரிபார்க்கப்பட்ட ஆதார் கடிதத்தின் அடிப்படையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்.

The post தமிழ்நாடு சீர்மரபினர் நல வாரிய நலத்திட்டங்களை பெற ஆதார் அங்கீகாரம் கட்டாயம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Heritage Welfare Board ,Chennai ,
× RELATED ‘இந்தி எதிர்ப்புப் போராட்டம் –...