×

சென்னை ஐகோர்ட் புதிய தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீ வஸ்தவா நாளை பதவியேற்பு: ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள மணிந்திர மோகன் ஸ்ரீ வஸ்தவா திங்கள் கிழமை (நாளை) பதவியேற்கிறார். அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைக்கவுள்ளார். சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்துவந்த கே.ஆர்.ஸ்ரீ ராம் ராஜஸ்தான் மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மணிந்திர மோகன் ஸ்ரீ வஸ்தவாவை நியமனம் செய்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டார்.

அதன்படி மணிந்திர மோகன் ஸ்ரீ வஸ்தவா நாளை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்கிறார். கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நாளை மாலை 4 மணிக்கு நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் புதிய தலைமை நீதிபதிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்துவைக்கவுள்ளார். நிகழ்ச்சியில் தமிழக சட்டத்துறை அமைச்சர், உயர் நீதிமன்ற நீதிபதிகள், அட்வகேட் ஜெனரல், கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள், மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர், அரசு பிளீடர்கள், அரசு செயலர்கள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

The post சென்னை ஐகோர்ட் புதிய தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீ வஸ்தவா நாளை பதவியேற்பு: ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார் appeared first on Dinakaran.

Tags : Chennai Aycourt ,Chief Justice ,M. M. Sri Vastava ,Governor ,Chennai ,Manindra Mohan Sri Vastava ,Chennai High Court ,R. N. Ravi ,Dinakaran ,
× RELATED தராசுகள் பறிமுதல் செய்ததை கண்டித்து...