விருதுநகர், ஜூலை 19: விருதுநகர் தூய இன்னாசியார் ஆலய 80வது ஆண்டு திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. ஆலய பங்குத்தந்தை அருள் ராயன், துணை பங்குத்தந்தை பிரின்ஸ் மற்றும் இறை மக்கள் முன்னிலையில் கம்பம் புனித ஆரோக்கிய அன்னை ஆலய பங்குத்தந்தை பாரிவளன், தூய இன்னாசியார் உருவம் பொறித்த கொடியை ஏற்றி வைத்து திருவிழாவை தொடங்கி வைத்தனர்.
திருவிழாவை முன்னிட்டு ஆலயம் வண்ணத் தோரணங்களால், மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. திருவிழா தொடர்ந்து 10 நாட்களாக நடைபெறும். திருவிழாவில் தினசரி மாலை நவநாள் திருப்பலியும், மறையுறையும் நடைபெறுகிறது.
9வது நிகழ்வாக ஜூலை 26ம் தேதி மாலை தூய மிக்கேல் அதிதூதர், தூய வேளாங்கண்ணி, தூய இன்னாசியார் திரு உருவம் மின்விளக்குகள், வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேர்பவனி நடைபெறும். ஜூலை 27ல் கொடியிறக்கம் செய்யப்பட்டு திருவிழா நிறைவடையும். திருவிழா ஏற்பாடுகளை ஆலய பங்குத்தந்தை அருள்ராயன், துணைப் பங்குத்தந்தை பிரின்ஸ் தலைமையில் இறை மக்கள் செய்து வருகின்றனர்.
The post தூய இன்னாசியார் ஆலய திருவிழா கொடியேற்றம் appeared first on Dinakaran.
