×

ஆண்டாண்டு காலமாய் நெஞ்சில் சுமந்த கனவு நனவான நாள்தான் ‘தமிழ்நாடு நாள்’: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: தமிழ்நாடு நாள், ஆண்டாண்டு காலமாய் நெஞ்சில் சுமந்த கனவு நனவான நாள்தான் ‘தமிழ்நாடு நாள்’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாடு நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: தமிழ்நாடு நாள் – தமிழ்கூறு நல்லுலகின் வரலாற்றில் தனிப்பெரும் நாள்! ஜூலை 18, 1967: திமுக எனும் இயக்கம் ஆட்சி பொறுப்பேற்றதால் இம்மண்ணின் முகவரியின் முதல் வரியே மாற்றம் பெற்றது.

தமிழ்நாடு என்ற நம் உண்மை பெயரை அதிகாரப்பூர்வமாக பெற்று, ஆண்டாண்டு காலமாய் நெஞ்சில் சுமந்த கனவு நனவான நாள். அதுவரை இல்லாத சிறப்பாய் தாய்நிலத்துக்கு தலைமகன் பேரறிஞர் அண்ணா பெயர்சூட்டி ‘தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு’ என மூன்று முறை பேரவையில் முழங்க, மேசையொலிகள் விண்ணதிர்ந்த இந்நாள்தான் தமிழ்நாடு நாள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post ஆண்டாண்டு காலமாய் நெஞ்சில் சுமந்த கனவு நனவான நாள்தான் ‘தமிழ்நாடு நாள்’: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Day ,Chief Minister ,M.K. Stalin ,Chennai ,Tamil Nadu Day: ,Tamil Kooru Nallulakin… ,
× RELATED நாட்டின் பன்முகத்தன்மையை சிதைக்க...