×

ஹேமந்த் சோரன், கெஜ்ரிவாலை கைது செய்த அமலாக்கத்துறை அதிகாரி கபில் ராஜ் ராஜினாமா


புதுடெல்லி: பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இரண்டு முதல்வர்களின் கைது நடவடிக்கையை மேற்பார்வையிட்ட ஐஆர்எஸ் அதிகாரி கபில் ராஜ் ராஜினாமா செய்துள்ளார். உத்தரப்பிரதேசத்தின் சஹாரன்புர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஐஆர்எஸ் அதிகாரி கபில்ராஜ். 2009ம் ஆண்டு பேட்சை சேர்ந்த இவர் அமலாக்கத்துறையின் ராஞ்சி மண்டலத்தின் இணை இயக்குனராக பொறுப்பு வகித்தார். பின்னர் மும்பையில் அமலாக்கத்துறை இணை இயக்குனராக நியமிக்கப்பட்ட இவர் டிஎச்எப்எல் மற்றும் இக்பால் மிர்ச்சி வழக்குகளை தவிர வைர வியாபாரிகளான நீரவ் மோடி மற்றும் மெஹூல் சோக்சி மீதான பண மோசடி வழக்குகளையும் விசாரித்தவர். இவர் தனது பதவிக்காலத்தில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், டெல்ரலி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரை கைது செய்தவர்.

கபில் ராஜ் 8 ஆண்டுகள் அமலாக்கத்துறையில் பணியாற்றினார். சமீபத்தில் டெல்லியில் உள்ள ஜிஎஸ்டி புலனாய்வு பிரிவில் கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் தனிப்பட்ட காரணங்களுக்காக கபில் ராஜ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக நிதியமைச்சகம் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில்,\\” இந்திய வருவாய் சேவை அதிகாரி பதவியில் இருந்து கபில்ராஜ் ராஜின் ராஜினாமாவை குடியரசு தலைவர் ஏற்றுக்கொண்டுள்ளார். ஜூலை 17ம் தேதி முதல் இது அமலுக்கு வருகிறது\\” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சுமார் 16 ஆண்டுகள் பணியாற்றிய பின்னர் அரசு பணியில் இருந்து கபில்ராஜ் விலகியிருக்கிறார்.

The post ஹேமந்த் சோரன், கெஜ்ரிவாலை கைது செய்த அமலாக்கத்துறை அதிகாரி கபில் ராஜ் ராஜினாமா appeared first on Dinakaran.

Tags : Kapil Raj ,Enforcement Directorate ,Hemant Soren ,Kejriwal ,New Delhi ,IRS ,Saharanpur district ,Uttar Pradesh ,Ranchi… ,Dinakaran ,
× RELATED காரை திறந்தபோது வாகனம் மோதியதால்...