×

கோயில் நிலம் குத்தகைக்கு விட்டதை எதிர்த்து வழக்கு: பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்த காமராஜ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவணநாதசாமி கோயிலுக்கு சொந்தமான காலி நிலம் கோவில்பட்டி டவுன் பகுதியில் உள்ளது. இந்த நிலம் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. ஆனால், வாடகை ஒப்பந்தம் செய்தவர்கள் முறைகேடாக 30 வருட குத்தகைக்கு விட்டுள்ளனர். இது அறநிலையத்துறை விதிகளுக்கு எதிரானது. எனவே, கோயில் நிலத்தை சட்டவிரோதமாக குத்தகைக்கு விட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, வேல்முருகன் ஆகியோர், மனுவிற்கு அறநிலையத்துறை மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்….

The post கோயில் நிலம் குத்தகைக்கு விட்டதை எதிர்த்து வழக்கு: பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Madurai ,Kamaraj ,Thoothukudi ,Kovilpatti ,ICourt ,Senbhagavalli Amman Udanurai ,Dinakaran ,
× RELATED மதுரை ஒத்தக்கடை பகுதியில் சாலையில்...