×

காசாவில் கிறிஸ்தவ தேவாலயம் மீது இஸ்ரேல் தாக்குதல்: 2 பேர் பலி

டெய்ர் அல் பலாஹ்: இஸ்ரேலுக்கும் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் படையினருக்கும் இடையே 21 மாதங்களாக போர் நீடித்து வருகிறது. இந்நிலையில் காசாவில் உள்ள ஒரே கத்தோலிக்க தேவாலயம் மீது இஸ்ரேல் நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் திருச்சபையின் கரிட்டாஸ் வளாகத்துக்குள் பிரார்த்தனை செய்து கொண்டிருந்த ஒரு பெண்ணும், தேவாலயத்தின் துப்புரவு பணியாளரும் கொல்லப்பட்டனர். “இந்த தாக்குதல் பற்றி எங்களுக்கு தெரியும், தேவாலயம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பற்றி விசாரணை நடத்தி வருகிறோம்” என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

The post காசாவில் கிறிஸ்தவ தேவாலயம் மீது இஸ்ரேல் தாக்குதல்: 2 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Christian ,Gaza ,Dair al-Balah ,Israel ,Hamas ,Gaza Strip ,Catholic ,Dinakaran ,
× RELATED வங்கதேசத்தின் சிட்டகாங்கில் இந்திய...