இம்பால்: மணிப்பூரில் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் சொந்த கிராமத்துக்கு திரும்பிய 100க்கும் மேற்பட்டோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுத்து நிறுத்தப்பட்டனர். மணிப்பூரில் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள டோலைதாபி கிராமம் பதற்றம் மிகுந்த இடமாகும் .கடந்த 2023ம்ஆண்டு வன்முறை வெடித்தபோது காங்போக்பி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் இருந்து பல்வேறு தாக்குதல்களை எதிர்கொண்டது.
இந்நிலையில் சஜிவா அருகே உள்ள நிவாரண முகாமில் தங்கியிருந்த 100க்கும் மேற்பட்டோர் நேற்று தங்களது சொந்த கிராமங்களுக்கு திரும்பி வந்தனர். ஆனால் அவர்கள் கிராமத்திற்குள் நுழைவதற்கு முன்னதாகவே சுமார் 2.5கி.மீ. தொலைவில் புகாவோ தேஸ்பூர் அருகே தடுத்து நிறுத்தப்பட்டனர்.
எந்தவொரு அசாம்பாவிதமும் ஏற்படாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்கள் சொந்த கிராமங்களுக்கு திரும்புவதை தடுத்து நிறுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மாவட்ட நிர்வாகம், மூத்த காவல்துறை அதிகாரிகள் உள்ளூர் தலைவர்களடன் இந்த பிரச்னைக்கு இணக்கமான தீர்வு காண்பதற்காக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். நிலைமை அமைதியாகவும் தொடர்ந்து கட்டுக்குள் இருந்து வருகின்றது. போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
The post மணிப்பூரில் சொந்த கிராமத்துக்கு திரும்பிய 100 பேர் தடுத்து நிறுத்தம் appeared first on Dinakaran.
