×

முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் அறிவிப்பு

சென்னை: முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே இருக்கும் நிலையில், அதை எதிர்கொள்ள ஆளுங்கட்சியான தி.மு.க. முன்கூட்டியே தயாராகி வருகிறது. அந்த வகையில் நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்; திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம்” நாளை வியாழக்கிழமை காலை 10.00 மணி அளவில், காணொலி காட்சி வாயிலாக நடைபெறும்.

இந்த கூட்டத்தில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் திமுக உறுப்பினர் சேர்க்கை குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Dimuka Chairman K. ,Stalin ,Chennai ,Tamil Nadu Assembly ,M. K. ,Chief Executive Officer ,Mu. K. ,Dinakaran ,
× RELATED வி பி – ஜி ராம் ஜி என்ற புதிய...