×

தமிழ்நாட்டில் மருத்துவக் கழிவுகளை கொட்டினால் குண்டர் சட்டம்: அமலுக்கு வந்த சட்டத்திருத்தம்!

சென்னை: மருத்துவக் கழிவுகளை கொட்டினால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். ஜூலை 8ம் தேதி முதல் சட்டத்திருத்தம் அமலுக்கு வந்ததாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டிற்குள் வெளி மாநிலங்களைச் சேர்ந்த மருத்துவக் கழிவுகள் கொட்டப்படும் சம்பவம் அண்மைக் காலங்களில் அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்கும் விதமாக இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சட்டமன்றத்தில், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஒரு மசோதாவைத் தாக்கல் செய்தார். இந்த மசோதாவிற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த ஜூன் மாதம் ஒப்புதல் அளித்திருந்தார்.

இந்த சட்டத் திருத்த மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, கடந்த ஜூன் மாதம் ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டார். இந்நிலையில், மருத்துவக் கழிவுகளைக் கொட்டினால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும் வகையில் திருத்தப்பட்ட சட்டம், ஜூலை 8 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்ததாக அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் பொது இடங்களில் உயிரி மருத்துவக் கழிவுகளை முறையற்ற முறையில் குவித்தாலோ, அண்டை மாநிலங்களில் இருந்து கொண்டுவந்து தமிழகத்தில் மருத்துவக் கழிவுகளைக் கொட்டினாலோ உயிரி மருத்துவக் கழிவு மேலாண்மை விதிகளை மீறியதாகக் கருதி, நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்படும் ஆணைக்கு சமமாக விசாரணையின்றி குற்றம் செய்தவரை சிறைவைக்க முடியும். இதில் சம்பந்தப்பட்ட நபா்களுக்கு எதிராக பொது அறிவிப்பும் வெளியிடப்பட்டு, அத்தகைய நபா்களின் சொத்துகளையும் பறிமுதல் செய்ய இந்த சட்டத் திருத்தம் வகை செய்கிறது.

The post தமிழ்நாட்டில் மருத்துவக் கழிவுகளை கொட்டினால் குண்டர் சட்டம்: அமலுக்கு வந்த சட்டத்திருத்தம்! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Tamil Nadu government ,
× RELATED எதிரிக்கட்சி தலைவராக எடப்பாடி...