- விவசாயிகள் சங்கம்
- அருப்புக்கோட்டை
- காவிரி வைகை கிருத்துமால் குண்டாறு பாசன விவசாயிகள் சங்கம்
- சங்கம்
- தின மலர்
அருப்புக்கோட்டை, ஜூலை 16: அருப்புக்கோட்டை அருகே கோவிலாங்குளம் மண்டல வேளாண்மை ஆராய்ச்சி நிலைய நிலங்களை சிப்காட் தொழிற் பேட்டை அமைக்க எடுக்க கூடாது என்று வலியுறுத்தி காவிரி வைகை கிருதுமால் குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் மண்டல வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராம் பாண்டியன், மாவட்டச் செயலாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
கோவிலாங்குளம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பாலசுப்பிரமணியன், பெண் விவசாயிகள் சங்கம் தலைவர் வாசுகி, மாவட்ட இணைச் செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் அர்ச்சுணன், மாநில செயலாளர் முருகன், ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் முகவை மலைச்சாமி ஆகியோர் கண்டன உரை ஆற்றினர். விருதுநகர் மாவட்ட நிர்வாகிகள் ராமமூர்த்தி, ராஜேந்திரன், கருப்பு சாமி, மகாலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர். பண்ணை மூன்றடைப்பு அர்ஜூனன் நன்றி கூறினார்.
The post விவசாயிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.
