×

காமராஜர் ஆற்றிய பணிகள் தமிழ் மண்ணில் என்றும் நிலைத்திருக்கும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் டிவிட்

சென்னை: காமராஜர் ஆற்றியப் பணிகள் தமிழ் மண்ணில் என்றும் நிலைத்திருக்கும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வளைதள பதிவு:  கல்வி எனும் ஒளி சமூகத்தில் மண்டிக்கிடந்த இருளை எப்படியெல்லாம் கிழித்தெறியும் என்பதை சாத்தியப்படுத்தி காட்டிய கர்ம வீரர் காமராஜரின் பிறந்த நாள் இன்று! எட்டாக்கனியாக இருந்த கல்வி, ஏழை – எளிய பிள்ளைகள் எல்லோருக்கும் சென்று சேர பள்ளிகளை திறந்து, மதிய உணவிட்ட காமராஜரின் பிறந்த நாளை, கல்வி வளர்ச்சி நாள் என்று அறிவித்தார் கலைஞர்.

காமராஜர் வாழ்ந்த தியாகராய நகர் இல்லத்தை புதுப்பிப்பதோடு, அவர் பெயரில் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தை திருச்சியில் அமைக்கிறார் நம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். காமராஜர் கண்ட கல்விக் கனவுகளை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன், நான் முதல்வன் போன்ற திட்டங்களின் வழியே நனவாக்கி வருகிறது நம் திராவிட மாடல் அரசு. பெருந்தலைவர் காமராஜர் ஆற்றியப்பணிகள் தமிழ் மண்ணில் என்றும் நிலைத்திருக்கும் – வழிகாட்டும். அவர் புகழ் ஓங்கட்டும்! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post காமராஜர் ஆற்றிய பணிகள் தமிழ் மண்ணில் என்றும் நிலைத்திருக்கும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் டிவிட் appeared first on Dinakaran.

Tags : Kamaraj ,Deputy Chief Minister ,Udhayanidhi Stalin ,Chennai ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி 1232 கன அடியாக உள்ளது!