×

இன்று முதல் எல்எல்எம் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை: சீர்மிகு சட்டப் பள்ளியில் எல்எல்எம் முதுநிலை சட்டப் படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக பதிவாளர் கவுரிரி ரமேஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னையில் இயங்கி வரும் சீர்மிகு சட்டப் பள்ளியில் பயிற்றுவிக்கப்படும் எல்எல்எம் எனும் 2 ஆண்டு முதுநிலை சட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.

விருப்பம் உள்ளவர்கள் www.tndalu.ac.in எனும் இணையதளம் வாயிலாக (ஜூலை 15) இன்றுமுதல் ஆகஸ்ட் 16 மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான கல்வித்தகுதி, கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் உட்பட கூடுதல் விவரங்களை மேற்கண்ட இணையதள பக்கத்தில் சென்று தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post இன்று முதல் எல்எல்எம் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu ,Dr. Ambedkar Law University ,Gouriri Ramesh ,Dinakaran ,
× RELATED விஜய் தற்போது முன்னாள் நடிகர் நாங்கள்...