×

தமிழகம் முழுவதும் 33 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்: உள்துறை செயலாளர் தீரஜ்குமார் உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் 33 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து உள்துறை செயலாளர் தீரஜ்குமார் வெளியிட்டுள்ள உத்தரவு:
சமூக நீதி மற்றும் மனித உரிமை ஐஜியாக உள்ள மகேந்திரகுமார் ரத்தோடு, தலைமையிட ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார். சேலம் கமிஷனராக உள்ள பிரவீன்குமார் அபினபு சென்னை டிஜிபி அலுவலக பொது பிரிவு ஐஜியாகவும், அந்த பதவியில் இருந்த சாமுண்டீஸ்வரி சமூக நீதி மற்றும் மனித உரிமை ஐஜியாகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த அனில்குமார் கிரி சேலம் நகர ஆணையராகவும், வேலூர் டிஐஜியாக இருந்த தேவராணி காஞ்சிபுரம் டிஐஜியாகவும், சென்னை மாநகர உளவுத்துறை இணை கமிஷனராக இருந்த தர்மராஜன் வேலூர் சரக டிஐஜியாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சிறப்பு பிரிவு எஸ்பியாக இருந்த அருளரசு, தீவிரவாத தடுப்பு படையின் எஸ்பியாகவும், தமிழ்நாடு கமாண்டோ படை எஸ்பியாக இருந்த அருண் பாலகோபாலன் அறிவுசார் சொத்துரிமை அமலாக்க பிரிவு எஸ்பியாகவும், சென்னை மாநகர பாதுகாப்பு பிரிவு எஸ்பியாக இருந்த சுஜித்குமார் கோயம்பேடு துணை கமிஷனராகவும், அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப் பிரிவு எஸ்பியாக இருந்த சாம்சன் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு எஸ்பியாகவும், கரூர் எஸ்பியாக இருந்த பெரோஸ்கான் அப்துல்லா ஆவடி துணை கமிஷனராகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஆசீஸ் ராவத் பொருளாதார குற்றப்பிரிவு எஸ்பியாகவும், நாமக்கல் எஸ்பியாக இருந்த ராஜேஷ் கண்ணன் சிறப்பு பிரிவு சிஐடி எஸ்பியாகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தேனி எஸ்பியாக இருந்த சிவபிரசாத் சிவகங்கை எஸ்பியாகவும், லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்பியாக இருந்த விமலா நாமக்கல் எஸ்பியாகவும், போதைப் பொருள் தடுப்பு பிரிவு எஸ்பியாக இருந்த மயில்வாகனன் வேலூர் எஸ்பியாகவும், சென்னை வடக்கு போக்குவரத்து துணை கமிஷனராக இருந்த விஸ்வேஸ் பாலசுப்பிரமணியம் சாஸ்திரி அரியலூர் எஸ்பியாகவும், சென்னை அண்ணாநகர் துணை கமிஷனர் புக்யா சினேகா பிரியா, தேனி எஸ்பியாகவும், ஆவடி துணை கமிஷனர் அய்மன் ஜமால் ராணிப்பேட்டை எஸ்பியாகவும், அந்த பதவியில் இருந்த விவேகானந்தா சுக்லா திருவள்ளூர் எஸ்பியாகவும், கோவை தெற்கு துணை கமிஷனராக இருந்த உதயகுமார் சென்னை அண்ணாநகர் துணை கமிஷனராகவும், சென்னை கொளத்தூர் துணை கமிஷனர் பாண்டியராஜன் பழனி பட்டாலியன் கமாண்டன்ட்டாகவும், கோயம்பேடு துணை கமிஷனர் அதி வீரபாண்டியன் காத்திருப்போர் பட்டியலுக்கும் மாற்றம் செய்யப்பட்டனர்.

மதுவிலக்குப் பிரிவு எஸ்பி சியாமளா தேவி தஞ்சாவூர் எஸ்பியாகவும், பொருளாதர குற்றப்பிரிவு எஸ்பி ஜோஸ் தங்கையா கரூர் எஸ்பியாகவும், மெரைன் அமலாக்கப்பிரிவு எஸ்பியாக இருந்த டி.குமார் சென்னை தெற்கு போக்குவரத்து துணை கமிஷனராகவும், சென்னை சைபர் கிரைம் எஸ்பியாக இருந்த மாதவன் கள்ளக்குறிச்சி எஸ்பியாகவும், வேலூர் எஸ்பியாக இருந்த மதிவாணன் மாநில போதைப் பொருள் தடுப்புப் பிரிவு எஸ்பியாகவும், திருவள்ளூர் எஸ்பி சீனிவாச பெருமாள் மதுரை சிவில் சப்ளை எஸ்பியாகவும், சென்னை தெற்கு போக்குவரத்து துணை கமிஷனராக இருந்த பி.குமார் கொளத்தூர் துணை கமிஷனராகவும், நாகப்பட்டினம் கடலோர காவல்படை எஸ்பியாக இருந்த விஜய் கார்த்திக் ராஜ் மெரைன் அமலாக்கப் பிரிவு எஸ்பியாகவும், தீவிரவாத தடுப்பு படை எஸ்பியாக இருந்த கார்த்திகேயன் கோவை தெற்கு துணை கமிஷனராகவும், பொருளாதார குற்றப்பிரிவு தலைமையிட எஸ்பி கனகேஸ்வரி அதே பிரிவில் மத்திய மண்டல எஸ்பியாகவும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

The post தமிழகம் முழுவதும் 33 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்: உள்துறை செயலாளர் தீரஜ்குமார் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Home Secretary ,Dheeraj Kumar ,Chennai ,Mahendra Kumar Rathod ,IG of Social Justice and Human Rights ,IG ,Salem Commissioner… ,Dinakaran ,
× RELATED சகோதர உணர்வுமிக்க இந்தியா தான்...