×

கனடாவில் நடந்த ஜெகநாதர் ரத யாத்திரையில் பக்தர்கள் மீது முட்டை வீச்சு: ஒன்றிய அரசு கண்டனம்

டொராண்டோ: கனடா டொராண்டோவில் ஜெகநாதர் ரத யாத்திரை நடந்தது. அப்போது திரளான பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர். இந்த யாத்திரையில் பங்கேற்ற பக்தர்களை குறிவைத்து முட்டை வீசப்பட்டது. இது தொடர்பான வீடியோவை சங்னா பஜாஜ் என்பவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் டொராண்டோவின் தெருக்களில் பக்தர்கள் பக்திப் பாடல்களைப் பாடி, ஊர்வலமாக வந்தனர். அப்போது அருகிலுள்ள கட்டிடத்திலிருந்து ஒருவர் பக்தர்கள் மீது முட்டைகளை வீசினார்.

இந்த சம்பவம் குறித்து ஒன்றிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில்,’ இந்த சம்பவம் வெறுக்கத்தக்கது. இது குறித்து கனடா அதிகாரிகளிடம் இந்தியா புகார் அளிக்கும். இதுபோன்ற இழிவான செயல்கள் வருந்தத்தக்கவை மற்றும் ஒற்றுமை, உள்ளடக்கம் மற்றும் சமூக நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் ’ என்றார்.

The post கனடாவில் நடந்த ஜெகநாதர் ரத யாத்திரையில் பக்தர்கள் மீது முட்டை வீச்சு: ஒன்றிய அரசு கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Jehanathar Ratha Yatra ,Canada ,EU Government ,Toronto ,Jeganathar Ratha Pilgrimage ,Toronto, Canada ,Sangna Bajaj ,
× RELATED மலேசியாவில் நடந்த கார் ரேஸில் பழுதாகி நின்ற அஜித் குமாரின் கார்