புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது எக்ஸ் தள பதிவில்,‘‘இந்தியாவில் கல்வியின் உண்மையான நிலையை சித்தரிக்கும் அபாயகரமான குறியீடுகளை பரீஷா பே சர்ச்சா மற்றும் எக்சாம் வாரியர்ஸ் போன்ற பரபரப்பான வார்த்தைகள் மற்றும் சுய விளம்பர நிகழ்வுகளால் மூடிமறைக்க முடியாது. தரவரிசை அலட்சியமானது கற்றல் விளைவுகளை வீழ்ச்சியடைய வழிவகுக்கிறது.
மோடி அரசானது நமது எதிர்காலம் குறித்த அக்கறையின்மையுடன் உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் ராஷ்ட்ரீய சர்வேஷன் 2024 கணக்கெடுப்பின் முடிவு குறித்த வீடியோவையும் கார்கே இணைத்துள்ளார். இந்த வீடியோவானது தேசிய கற்றல் நெருக்கடியானது கொரோனாவுக்கு முந்தைய காலத்தைவிட மோசமாக உள்ளதை குறிப்பிடுகின்றது. மேலும் அடிப்படை பாடத்திட்டத்தில் தோல்விகள் மற்றும் நடுநிலை மற்றும் உயர்நிலை கல்வியில் கற்றல் இடைவெளி அதிகரித்து வருவதையும் இந்த வீடியோ சுட்டிக்காட்டியுள்ளது.
The post கொரோனா காலத்தை விட மோசம் மாணவர்களிடையே கற்றல் இடைவெளி அதிகரிப்பு: கார்கே விமர்சனம் appeared first on Dinakaran.
