×

திருஇந்தளூர் பத்ரகாளியம்மன் கோயில் பால்குட திருவிழா

*ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்

மயிலாடுதுறை : மயிலாடுதுறை அருகே பத்ரகாளியம்மன் கோயில் பால்குடம் காவடி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.மயிலாடுதுறை ஒன்றியத்துக்கு உட்பட்ட திருஇந்தளூர் காமராஜர் தெருவில் உள்ள பத்திரகாளியம்மன் கோயில் பால்குடம் மற்றும் காவடி திருவிழா விமரிசையாக நடைபெற்றது.

முன்னதாக விரதம் இருந்த திரளான பக்தர்கள் காவிரி ஆற்றங்கரை துலா கட்டத்தில் புனித நீராடி மேளதாள வாத்தியங்கள் முழங்க, காப்பு கட்டி பால்குடம் மற்றும் அலகு காவடி எடுத்து நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்தனர்.

பால்குடத்திற்கு வீடு வீடாக பக்தர்கள் தீபாராதனை காட்டி வழிபட்டனர். அதனை தொடர்ந்து பால்குடம் கோயிலை சென்றடைந்தது. அங்கு பத்ரகாளியம்மனுக்கு பக்தர்கள் தலையில் சுமந்து வந்த பால் குடத்தால் பாலபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

The post திருஇந்தளூர் பத்ரகாளியம்மன் கோயில் பால்குட திருவிழா appeared first on Dinakaran.

Tags : Thiruindalur Bhadrakaliamman Temple Milk Kudam Festival ,Mayiladuthurai ,Bhadrakaliamman Temple Milk Kudam Kavadi Festival ,Bhadrakaliamman Temple ,Kamaraj Street ,Thiruindalur ,
× RELATED நாட்டின் பன்முகத்தன்மையை சிதைக்க...