×

டிஆர்பி போட்டித் தேர்வு தேதி ஒத்திவைப்பு

சென்னை: அரசு மேனிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணி உள்ளிட்ட சில பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. முதுநிலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-1, மற்றும் கணினி பயிற்றுநர் நிலை-1, ஆகிய பணியிடங்களுக்கான அறிவிப்பு ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் கடந்த 10ம் தேதி வெளியிடப்பட்டது. மேற்கண்டபணியிடங்களுக்கான தேர்வு செப்டம்பர் 28ம் தேதி நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மேற்கண்ட தேர்வு நடக்கும் நாளில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 தேர்வு நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக மேற்கண்ட முதநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிட தேர்வு நடக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

The post டிஆர்பி போட்டித் தேர்வு தேதி ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Teachers Selection Board ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி 1232 கன அடியாக உள்ளது!